தனுஸ்கோடி அரிச்சல்முனை சுற்றுலா பயணிகள் செல்ல காவல்துறையினர் தடை
தனுஸ்கோடி அரிச்சல் முனை பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் தடுப்பு சுவர் அரிப்பு ஏற்பட்டு இடிந்து விழுந்தது.
இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல காவல்துறையினர் தடை விதித்தனர்.
ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஸ்கோடி பகுதியில் மன்னார்வளைகுடா மற்றும் பாக்நீரினை என இரண்டு கடல் பகுதிகள் இணையும் இடமான அரிச்சல்முனை கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாற்றாக இன்று கடல் சீற்றத்துடன் காணப்படுகின்றது. இதனால் கடல் அரிப்பு ஏற்பட்டு கரையோரங்களில் உள்ள தடுப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது.
இதனால் அரிச்சல்முனை பகுதி சுற்றுலாபயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றது. மேலும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அரிச்சல்முனை பகுதிக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல காவல்துறையினர் இன்று தடை விதித்தனர். மேலும் தனுஸ்கோடியில் காவல்துறையினர் மூலம் சுற்றுலாபயணிகள தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் வாகனங்களில் அரிச்சல் முனை செல்ல முடியாத சில பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் 5கிலோ மீட்டர் தூரம் நடந்து அரிச்சல்முனை பகுதிக்கு செல்கின்றனர், பலர் அங்கு செல்லமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
This News Covered From Ramanathapuram District Reporter (Tamil) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or or or or
0 Comments